கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

" alt="" aria-hidden="true" />


சென்னை,

சென்னை ராயப்பேட்டை பைலட் சந்து பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா(வயது 27). இவர்களுக்கு திருமணமாகி நிகிதா என்ற ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் லதா 2-வது முறையாக கருவுற்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு தொடர்ந்து ரத்த போக்கு ஏற்பட்டு வந்தது.





 

இதனால் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப் போது அவருக்கு கரு கலைந்து விட்டது. இதையடுத்து சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்தார். சிகிச்சை முடிந்து வந்த பிறகும் அவருக்கு ரத்த போக்கு இருந்ததாக கூறப்படுகிறது. லதாவின் கணவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் லதாவும், அவரது ஒரு வயது குழந்தை நிகிதாவும் மட்டும் இருந்தனர்.





இந்தநிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டின் கதவை அவர் உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். பின்னர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி அவர் தீ வைத்துக் கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லதாவும், அவரது குழந்தையும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந் தது. இந்தநிலையில் குழந்தையும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசாருக்கு தக வல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து, கரு கலைந்ததால் விரக்தியில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகியதால், இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



Popular posts
நெல்லை, தூத்துக்குடியில் ஒரே நாடு - ஒரே ரேஷன் பிப் 1முதல் அமல்
தலையில் கல்லைப்போட்டு வக்கீல் கொலை நண்பர்கள் கைது
Image
செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Image
சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்
Image
இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசனை
Image