புதிய இந்தியா படைக்க குடியரசு தினத்தில்
உறுதிஏற்போம் என
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.அதில்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருஅவர்கள் இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி இந்த குடியரசு தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திரு நாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும் வீர தீரசாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள் பாராட்டுகள் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததையும் ஜனநாயகத்தின் சாராம்சத்தையும் இந்நாள் நமக்கு நினைவுபடுத்துகிறது. மக்கள் நாட்டின் எஜமானர்கள் என்பதுதான் குடியரசின் பொருள். தேசவளம் தொழில் நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம்.
மதம்,ஜாதி,இனம்,மொழி,கலாச்சாரம் என பல்வேறுவேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒரே சொல்லில் நாம் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளோம். உலக நாடுகளில் ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. இதற்கு குந்தகம் விளைவிப்போரை வீழ்த்திபுதிய இந்தியா படைக்க குடியரசு நாளில் உறுதியேற்போம் என கூறி உள்ளார்.